லிபியாவில் கடாபியின் ஆட்சி
காலத்தில் காணாமல் போன எதிர்க்கட்சி தலைவரின் உடல் 19 ஆண்டுகளுக்கு பின்னர் சடலமாக
மீட்கப்பட்டுள்ளது.
லிபியாவில் கடாபி ஆட்சி காலத்தில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர்
மன்சௌர் அல்-கிகியா.
கடாபியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பிய மன்சௌர், திடீரென்று 19
ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் காணமல் போனார்.
இந்நிலையில் கடாபிக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாக தகவல் பரவியது. ஆனால் மன்சௌரை
கடாபியின் தொண்டர்கள் கடத்தி கொலை செய்து, அவரது உடலை சவக்கிடங்கில் மறைத்து
வைத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் லிபியாவில் ஏற்பட்ட போராட்டத்தை அடுத்து கடாபி ஆட்சியை விட்டு
வெளியேறினார். அதன் பின்னர் புரட்சிக்காரர்களால் பிடிக்கப்பட்டு நடுரோட்டில்
கொல்லப்பட்டார்.
அவரின் மரணத்திற்குப் பின்னர் லிபியாவில் நடைபெற்ற விசாரணையில், அல்-கிகியாவின்
உடல் கைப்பற்றப்பட்டுள்ளது.
19 ஆண்டுகள் கடந்த நிலையில் அல்-கிகியாவின் உடல் பிரேச பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. பிரேத
பரிசோதனைக்குப் பிறகு இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
newsonews.thanks |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக