திங்கள், 3 டிசம்பர், 2012

எம்ஜிஆர் நினைவிடத்தில் இரட்டைஇலை சின்னம் அமைக்க எதிர்ப்பு!


எம்ஜிஆர் நினைவிடத்தில் இரட்டைஇலை சின்னம் அமைக்க எதிர்ப்பு!December 3, 2012  03:30 pm
எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் முகப்பில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் அமைப்பதைத் தடுக்க வேண்டும் என்று திமுக வழக்குரைஞர் அணி செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்
.

இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் ஆகியோருக்கு ஆர்.எஸ். பாரதி புகார் மனு அனுப்பியுள்ளார்.மனுவில் கூறியுள்ள விவரம்: 

அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 29.1.2012 - அன்று எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா நினைவிடங்களைப் புதுப்பிப்பதற்காக ரூ.8.90 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் அண்ணா நினைவிடத்துக்கு ரூ.1.20கோடி, எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு ரூ.4.30 கோடி, எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் முகப்பை மாற்றியமைக்கும் பணி மற்றும் சுற்றுச்சுவர்கள் அமைப்பதற்கு ரூ.3.40 கோடி என நிர்ணயிக்கப்பட்டு கடந்த 10 மாதங்களாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

ஆனால் எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் முகப்பாக அதிமுகவின் இரட்டை இலை சின்னம் அமைக்கப்படுவதாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. அரசு பராமரிக்கும் இந்த நினைவிடங்களில் கட்சியின் சின்னத்தை அமைக்க முடியாது. அரசு பணத்தில் இவ்வாறு அமைப்பது தவறானதாகும். மேலும் இரு நினைவிடங்களுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். 

அப்பாவி மக்களின் பார்வையில் இரட்டை இலை சின்னம் தமிழக அரசின் சின்னம்போல் பார்க்கக்கூடிய நிலை வரும். இது தேர்தல் நேரத்தில் திமுக உள்பட அனைத்துக் கட்சிகளையும் பாதிக்கும். அதனால் எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் முகப்பில் இரட்டை இலை சின்னம் அமைப்பதைத் தடுக்க வேண்டும். அதே சமயம் எம்.ஜி.ஆர். நினைவிடம் புதுப்பிக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை என்று அவர் மனுவில் கூறியுள்ளார். 

thamilan. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக