திங்கள், 3 டிசம்பர், 2012

வியட்நாம் போரில் பயன்படுத்திய குண்டுவெடித்து 4 சிறுவர்கள் பலி

[ திங்கட்கிழமை, 03 டிசெம்பர் 2012, 08:24.47 மு.ப GMT ]
வியட்நாம் போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டுவெடித்து 4 சிறுவர்கள் பலியாகினர். ஐவர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 1955ம் ஆண்டு முதல் 1975ம் ஆண்டு வரை அமெரிக்கா- வியட்நாம் இடையே போர் நடந்தது.

இப்போரில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட் குண்டுகள் இன்றும் வியட்நாமின் பல பகுதிகளில் ஆங்காங்கே வெடிக்காமல் கிடக்கின்றன.
இந்நிலையில், வியட்நாமின் Hieu Nghia கிராமத்தில் நேற்று மதியம் 4 முதல் 11 வயதுமிக்க சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த போது அங்கிருந்த ராக்கெட் குண்டு திடீரென வெடித்ததில் 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலும், ஒரு சிறுவன் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.
மேலும் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1975ல் நடந்த இப்போரின் முடிவில் 42000 இறந்ததாக அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது.

newsonews. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக