வியாழன், 21 பிப்ரவரி, 2013

22/2/2013 eutamilar news


வெளிநாடுகளில் அடைக்கலம் கோருவோரின் குடியுரிமையை நீக்குகிறது சிறிலங்கா!!

on Friday, 22 February 2013 04:58.
வெளிநாடுகளில் அடைக்கலம் கோருவோரின் குடியுரிமையை நீக்கும் புதிய சட்டம் ஒன்றை சிறிலங்கா கொண்டு வரவுள்ளது. இந்தத் தகவலை சிறிலங்காவின் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா வெளியிட்டுள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சிக்கு ஆதாரங்கள் கிடைத்தது எவ்வாறு?

on Friday, 22 February 2013 04:53.
ஈழத்தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பை உலகின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வெளிக்கொண்டு வந்ததில் சனல் 4 தொலைக்காட்சியினதும் அதன் பணியாளர்களினதும் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனால், அவர்களுக்கான உறுதியான ஆதாரங்கள் எவ்வாறு கிடைக்கின்றது...

இறுதிக்கட்ட போரில் பிரபாகரனை பாதுகாக்க முயற்சி செய்யவில்லை!

on Friday, 22 February 2013 04:46.
இலங்கையில் கடந்த 2009ம் ஆண்மு் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை, போர் வலயத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற முற்பட்டதாகக் கூறப்படும் கருத்துக்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நிராகரித்துள்ளது.

லண்டன் தமிழரை கொழும்பில் வைத்து காணவில்லை !

on Friday, 22 February 2013 04:35.
பிரிட்டன் குடியுரிமை பெற்ற யாழ்ப்பாணத்து நபர் கொழும்பில் காணாமல் போயுள்ளார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. காரைநகரைச் சேர்ந்தவரும் யாழ்.ஈச்சமோட்டைப் பகுதியில் வசித்தவருமான

அணுகுண்டு விபத்தில் தீயில் எரியும் ஒபாமா- அமெரிக்கபடை: வட கொரியா!

on Thursday, 21 February 2013 16:50.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அணுகுண்டு வீச்சில் எரிவது போன்ற வீடியோ காட்சிகளை வட கொரியா வெளியிட்டுள்ளது. வட கொரியா கடந்த 12-ம் திகதி, அணுகுண்டு சோதனை நடத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து அமெரிக்காவுக்கு எதிரான பிரசாரத்தில் வடகொரியா ஈடுபட்டுள்ளது.

ஹைதராபாத்தில் தொடர் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி!

on Thursday, 21 February 2013 16:08.
ஹைதராபாத்தில் 3 இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஆந்திரா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையத்தில் இன்று மாலை 7h00 மணியளவில் சக்திவாய்ந்த குண்டுவெடித்தது.

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி: லண்டன் - ஜெனீவா நோக்கி நடைபயணம்!

on Thursday, 21 February 2013 15:47.
இலங்கை சிங்கள- பெளத்த பேரினவாத ஆட்சியாளர்களால் இன அழிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்காகன நீதி கோரும் நடைபயணம், நேற்று (20.02.2013) லண்டனில் இருந்து ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை நோக்கி ஆரம்பமானது. இலங்கைத் தீவில் 1948 ஆம் ஆண்டு முதல் தமிழினப் படுகொலைகள்...

கிரிஸ் நாட்டின் வேலைநிறுத்தப் போராட்டம்: வன்முறையில் முடிந்தது!

on Thursday, 21 February 2013 10:30.
கிரிஸ் (Greek) நாட்டில் அரசின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில், கலவரமும் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. தலைநகர் ஏதென்ஸின் நடைபெற்ற போராட்டத்தை கலைக்க போலீஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர்.

இங்கிலாந்து பிரதமரின் பாதுகாப்பு படை அதிகாரி சுட்டுக் கொலை!

on Thursday, 21 February 2013 10:16.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பாதுகாப்புப் அதிகாரி புதன்கிழமை அன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிரதமர் உள்ளிட்ட அரசின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் படையில் இவர் பணியாற்றினார். வடக்கு லண்டனின் காம்டேன் எனும் இடத்திலுள்ள...

விடுதலைப்புலிகள் ஜெனீவாவை ஆக்கிரமித்து விட்டார்கள்!

on Thursday, 21 February 2013 09:14.
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஜெனீவாவை ஆக்கிரமித்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார் ரோகான் குணரட்ண. சிங்கப்பூரில் இருந்து இயங்கிவரும் கற்கை மையத்தின் தலைவரும், மகிந்தரின் ஆலோசகருமான ரோகான் குணரட்ண, வி.புலிகளின் முன்னணி அமைப்புகள் ஜெனிவாவை முற்றுகையிட்டு விட்டதாகவும்...,

சிறீலங்காவை தண்டிக்க இதுவே தக்க தருணம்: சனல் 4!

on Thursday, 21 February 2013 08:49.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்படுவதற்கு முன்பாக இராணுவப் பதுங்குகுழி போன்று காட்சியளிக்கும் ஓர் இடத்தில் பிஸ்கட் சாப்பிடும் படத்தை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம், இலங்கை அரசைத் தண்டிக்கத் தவறிய ஐ.நாவுக்கு தற்போது அதற்கான...

ஜோர்தானில் இலங்கை பணிப்பெண்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்!

on Thursday, 21 February 2013 08:38.
ஜோர்தானில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட, ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் இலங்கைப் பணிப்பெண்கள் சிலர் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஆடைத் திருட்டு சம்பவம் தொடர்பில் அதன் உரிமையாளர்கள்...

பாலச்சந்திரன் படுகொலை புகைப்படங்கள் தொடர்பில் கருத்துக் கூற ஐ.நா மறுப்பு!

on Thursday, 21 February 2013 07:54.
இலங்கை குறித்து ஐ.நா.வின் உள்ளக குழு மூன்று அறிக்கை தயாரித்துள்ளது. இது இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்களை ஆராய்வதற்கு அல்ல. அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதற்கே என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளதாக அவரது பேச்சாளர் (Martin-Nesirky) குறிப்பிட்டுள்ளார்.

மே 19 இல் தான் பாலனை படுகொலை செய்தார்கள்! தடய ஆய்வில் புதிய தகவல்!

on Wednesday, 20 February 2013 20:10.
தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் 2009 மே 19ஆம் திகதி நண்பகல் அளவில் கொல்லப்பட்டுள்ளதாக தடயவியல் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

விமானத்தில் முகமூடி கொள்ளையர்: 5 நிமிடத்தில் 50 மில்லியன் கொள்ளை!

on Wednesday, 20 February 2013 08:43.
மிகப்பெரிய வைரக் கொள்ளை, 8 முகமூடிக் கொள்ளையர், வெறும் 5 நிமிடத்தில் 50 மில்லியன் டாலர் வைரத்தை கொள்ளை அடித்துவிட்டு மாயமாகியுள்ளனர். இந்த துணிகர கொள்ளை நடந்தது, ஆளரவம் அற்ற இடத்தில் அல்ல, பெல்ஜியம் நாட்டு தலைநகர் பிரெசல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக