திங்கள், 1 அக்டோபர், 2012

தொழில் போட்டி காரணமாக ஸ்ரீபெரும்புதூர் தொழிலதிபர் கூலிப்படையினரால் வெட்டி கொலை.


Tuesday  02  October  2012  

தொழில் போட்டி காரணமாக, ஸ்ரீபெரும்புதூரில் திங்கள்கிழமை கார் மீது வெடிகுண்டு வீசப்பட்டு, ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளி ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்
.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் பி.பி.ஜி.குமரன்  ஸ்ரீபெரும்புதூர் 9-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர். இவர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனது அலுவலகத்துக்கு ஸ்ரீபெரும்புதூர்- தாம்பரம் சாலையில் வந்துக் கொண்டிருந்தார்.
காரை அவரே ஓட்டி வந்துள்ளார். அவருடன் அவரது நண்பர் மதியழகன் (43) இருந்துள்ளார்.
இவரது காருக்கு முன்னால் நண்பர் சங்கர் மற்றொரு காரில் சென்றுக் கொண்டிருந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் அருகே வரும்போது ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து தாம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த கார், சங்கர் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியதாம்.
இதனால், குமரனின் கார் நெரிசலில் சிக்கியுள்ளது. இதையடுத்து மோதிய காரில் இருந்து இறங்கி வந்த மர்மநபர்கள், குமரன் வந்த கார் மீது நான்கு நாட்டு வெடிகுண்டுகளை வீசினராம்.
காரின் அருகில் சென்ற 10 பேர் கொண்ட மர்ம நபர்கள் குமரனை வெட்டினராம். அவரது நண்பர்கள் சங்கர், மதியழகன் ஆகியோரையும் வெட்டினராம்.
ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் அருகே போக்குவரத்தை சரிசெய்துக் கொண்டிருந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதைப் பார்த்த மர்ம நபர்கள் தாங்கள் வந்திருந்த வாகனங்களில் ஏறி தப்பினர். இதில் ஒருவரை போலீஸார் பிடித்து கைது செய்தனர். பலத்த காயம் அடைந்த குமரன், சங்கர், மதியழகன் ஆகியோரை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு மூவரும் போரூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் குமரன் உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை: பிடிபட்ட இளைஞரிடம் நடந்த விசாரணையில், அவர் மதுரை கூலிப்படையைச் சேர்ந்த பிரவீன்குமார் (21) என்பது தெரியவந்தது.
பி.பி.ஜி. குமரனும், குன்றத்தூரை அடுத்த கெலத்திப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வைரவன் என்பவரும் ஒன்றாக தொழில் செய்து வந்துள்ளனர்.
இடையில் இவர்களுக்குள் பிரச்னை வரவே இருவரும் பிரிந்துள்ளனர். இதில் இருவருக்கும் இடையே தொழில்போட்டி இருந்து வந்துள்ளதும், வைரவன் உத்தரவின்பேரில் அவரது மைத்துனர் கொக்கி குமாரின் தலைமையில் மதுரையைச் சேர்ந்த கூலிப்படையினர் பி.பி.ஜி. குமரனை கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பிபிஜி குமரன் தொழிலதிபர் மட்டுமல்லாது சினிமா தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். வைகை என்ற படத்தை இவரே சொந்தமாக தயாரித்துள்ளார்.

as

thedipaar. THANKS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக