சனி, 23 ஜனவரி, 2021

பேரன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும்,20.01.2021 அன்று மாலை நடந்த செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்று இரு பள்ளிவாசல்களிலும் மழை நீர் ஒழுகுவதால் மரமாத்து வேலைகளுக்கு சுமார் ₹2.5 லட்சம் உத்தேச மதிப்பிட்டு தின கூலி வேலை நடை பெற்று வருகிறது. கொடையாளராகியா உங்களிடம் தங்களால் இயன்ற நன்கொடை கொடுத்து உதவிடுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு, ஜமாத் தலைவர்N.O.S.Aஅப்துல் ஹமீது*பெரிய பள்ளி வேலை விபரம் :*1. மேற்கூரையின் வட புறம், மற்றும் தென் புறம் முழுவதும் கைப்பிடி சுவற்றுக்குள் பாத்தி போன்ற அமைப்பிப்பின் காரணமாக பள்ளியின் உள்ளே நீர் கசிகிறது. அதையும் அத்துடன் இரண்டு அடி அகலத்திற்கு தட்டோடுகளையும் அகற்றி விட்டு புதிய தட்டோடுகளும், மழை நீர் கட்டிடத்தில் இருந்து நேரடியாக வெளியாவதற்கான மரமாத்து வேலை செய்யவிருப்பது.2. கழிவறை மற்றும் சிறுநீர் கழிப்பிடத்தில் மேற்கூறையில் செடிகள் முளைத்து சுவர் விரிவடைந்து விட்டதால் அதனை சரிசெய்தல்3. எஞ்சிய மழை நீர் கசியும் இடங்களும் சரி செய்ய படுகிறது*ஜாமியா பள்ளி வேலை விபரம்:*1. மேற்கூரையின் வடபுறம் வராண்டா ஏற்றம் இறக்கமாக தட்டோடுகள் போடப்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்று கீழே கசிவதால் அதனை அகற்றி விட்டு புதிய தட்டோடு பதித்தல்.2. வராண்டாவிம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியின் உள்ள நீர் கசிவுகளை சரி செய்வது.

Sahab appakutty

புதன், 20 ஜனவரி, 2021

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுவலசை ஊராட்சியில் உள்ள அரபி ஒளியுல்லா பள்ளிகளில் நமது ஊராட்சி மன்ற தலைவர் மீரான் ஓலி மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பசுலுதீன் ஆகியோர் முன்னிலையில் மதிய உணவு சமையல் அறை கூடத்தில் குடிநீர் வசதிக்காக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொடுக்கப்பட்டது...கடற்கரை சத்திரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு குடிநீர் வசதிக்காக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டது...என்றும் மக்கள் பணியில்..புதுவலசை ஊராட்சி மன்ற தலைவர்V.மீரான் ஒலி அவர்கள்.

Sahab appakutty

வெள்ளி, 15 ஜனவரி, 2021

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுவலசை ஊராட்சியில் காயிதேமில்லத் நகர் மற்றும் ஆசனி பகுதி மற்றும் நாடார் தெரு மற்றும் தாவுகாடு பகுதியில் கன மழை காரணமாக தண்ணீர் தேங்கி நின்றது... அதனை ஊராட்சி மன்றத்தலைவர் v.மீரான் ஒலி மற்றும் துணைத்தலைவர் பசுலுதீன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்முயற்சியில் இரண்டு JCB இயந்திரங்கள் மூலம் விரைவாக தோண்டி விட்டு தண்ணீர் சீராக வெளியேறுவதற்கு பணி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது... என்றும் மக்கள் பணியில்...புதுவலசை ஊராட்சி மன்றத் தலைவர் v.மீரான் ஒலி அவர்கள்.


Sahab appakutty

செவ்வாய், 12 ஜனவரி, 2021

நமது ஊரை சுற்றி நல்ல மழை

Sahab appakutty

புதுவலசை ஊராட்சி பகுதியில் கன மழை காரணமாக அங்கங்கே தண்ணீர் தேங்கி உயர் மின் அழுத்த மின் கம்பம்கள் அருகில் அபாயகரமாக உள்ள பணை மரங்கள் சாயும் நிலையில் இருந்ததை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணை மரங்களை JCB எந்திரத்தின் மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட்டது அதனை தொடர்ந்து ஊருக்குள் உள்ள மழை நீர் செல்லும் வடிகால் வாய்க்காள் தோண்டி விட்டு மழை நீர் செல்வதற்கு ஏதுவாக இடையூறுகளை நமது ஊராட்சி மன்ற தலைவர் V.மீரான் ஒலி முன்னிலையில் துரிதமாக அகற்றப்பட்டது

Sahab appakutty