சனி, 23 ஜனவரி, 2021

பேரன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும்,20.01.2021 அன்று மாலை நடந்த செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்று இரு பள்ளிவாசல்களிலும் மழை நீர் ஒழுகுவதால் மரமாத்து வேலைகளுக்கு சுமார் ₹2.5 லட்சம் உத்தேச மதிப்பிட்டு தின கூலி வேலை நடை பெற்று வருகிறது. கொடையாளராகியா உங்களிடம் தங்களால் இயன்ற நன்கொடை கொடுத்து உதவிடுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு, ஜமாத் தலைவர்N.O.S.Aஅப்துல் ஹமீது*பெரிய பள்ளி வேலை விபரம் :*1. மேற்கூரையின் வட புறம், மற்றும் தென் புறம் முழுவதும் கைப்பிடி சுவற்றுக்குள் பாத்தி போன்ற அமைப்பிப்பின் காரணமாக பள்ளியின் உள்ளே நீர் கசிகிறது. அதையும் அத்துடன் இரண்டு அடி அகலத்திற்கு தட்டோடுகளையும் அகற்றி விட்டு புதிய தட்டோடுகளும், மழை நீர் கட்டிடத்தில் இருந்து நேரடியாக வெளியாவதற்கான மரமாத்து வேலை செய்யவிருப்பது.2. கழிவறை மற்றும் சிறுநீர் கழிப்பிடத்தில் மேற்கூறையில் செடிகள் முளைத்து சுவர் விரிவடைந்து விட்டதால் அதனை சரிசெய்தல்3. எஞ்சிய மழை நீர் கசியும் இடங்களும் சரி செய்ய படுகிறது*ஜாமியா பள்ளி வேலை விபரம்:*1. மேற்கூரையின் வடபுறம் வராண்டா ஏற்றம் இறக்கமாக தட்டோடுகள் போடப்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்று கீழே கசிவதால் அதனை அகற்றி விட்டு புதிய தட்டோடு பதித்தல்.2. வராண்டாவிம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியின் உள்ள நீர் கசிவுகளை சரி செய்வது.

Sahab appakutty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக