புதன், 2 ஜனவரி, 2013

சிரியா சண்டையில் 60,000 பேர் பலி


சிரியா சண்டையில் 60,000 பேர் பலி


January 3, 2013  10:23 am
சிரியாவில் ஜனாதிபதி ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011-மார்ச் மாதம் போராட்டம் வெடித்தது. பின்னர் தீவிர சண்டையாக மாறியது. ஜனாதிபதி படைக்கும் போராளிக்குழுக்களுக்கும் இடையேயான இந்த உள்நாட்டு போரில் இதுவரை 60,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.


இது குறித்து ஐ.நா. மனித உரிமைக் கமிஷனர் நவநீதம் பிள்ளை கூறியிருப்பதாவது:-


சிரியாவில் ஜனாதிபதி ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக எழுந்துள்ள கிளர்ச்சியில், கடந்த நவம்பர் மாதம் வரை 59,648 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தகவலகள் கிடைத்துள்ளன. கவலை அளிக்கிற இந்த தகவலை பார்க்கிறபோது, 2013-ம் ஆண்டு தொடக்கம் வரை 60,000-க்கும் மேற்பட்டோர் அங்கு கொல்லப்பட்டு இருப்பார்கள் என்று எனக்கு தோன்றுகிறது.

நாம் எதிர்பார்க்கிறதை காட்டிலும் அங்கு அதிகமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். இது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. 2011-ம் ஆண்டு தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போரின் போது கொல்லப்பட்டோர்கள் பற்றிய விவரங்களை ஐ.நா. அமைப்பால் தெரிவிக்க முடியவில்லை.

சிரியாவில் மனித உரிமை அமைப்புகள் அனுமதிக்கப்பட முடியாத நிலையில் அங்கு நடந்து வரும் சண்டையின் தன்மையை பற்றியும், கொல்லப்படுபவர்கள் பற்றியும் சரியான விவரங்களை எங்களால் அளிக்க முடியவில்லை. சிரியாவில் அமைதி நிலவும் போது, அங்கு எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பதை அறிய விசாரணை தொடங்கப்படும். ஆனால் இந்த சூழ்நிலையில் அங்கு நடந்து வரும் கொலைகளுக்கு யார் பொறுப்பாளிகள்.

சிரியா உள்நாட்டுப்போரின் தொடங்கியதிலிருந்து இதுவரை கிடைத்த தகவல்களை பார்க்கிறபோது அங்கு கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு சராசரியாக 1000 பேரிலிருந்து, 5,000 பேராக அதிகரித்து இருக்கிறது என்று என்னால் வலியுறுத்தி கூறமுடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

thamilan. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக