நமதூரில் RDCC வங்கி கிளை வெகு சிறப்பான முறையில்
15-12-2012 அன்று திறக்கப்பட்டது. நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு நமதூர்
வாசிகளின் கூட்டு முயற்சியினாலும், ஒருங்கினைப்பினாலும் இந்த வங்கி கிளை நமதூருக்கு
கிடைத்திருப்பது ஒரு சந்தோஷமான தருனம் என்பது கிளை திறப்பு விழாவின் போது அங்கு
குழுமியிருந்த நமதூர் வாசிகளின் கண்களில் தென்பட்டது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் பற்றி ஒருசில குறிப்புகள்:
மத்திய கூட்டுறவு வங்கிகள் மாவட்ட தலைமையிடம் அல்லது மாவட்டத்தின் முக்கிய நகரப் பகுதிகளில் இருக்கும். இவ்வங்கிகளுக்கு சில தனிநபர்கள், நிதி மற்றும் மேலாண்மை ஆகியவற்றை வழங்குபவர் இருப்பர். மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மூன்று முக்கிய ஆதார நிதிகள் உள்ளது.
1. அவர்களின் சொந்த பங்கு முதலீடு மற்றும் இருப்புகள்.
2. பொது மக்களிடம் இருந்து பெறும் வைப்பு நிதிகள்.
3. மாநில கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து பெறும் கடன்கள்.
வங்கிகளின் முக்கிய
செயற்கூறுகள்:மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் பற்றி ஒருசில குறிப்புகள்:
மத்திய கூட்டுறவு வங்கிகள் மாவட்ட தலைமையிடம் அல்லது மாவட்டத்தின் முக்கிய நகரப் பகுதிகளில் இருக்கும். இவ்வங்கிகளுக்கு சில தனிநபர்கள், நிதி மற்றும் மேலாண்மை ஆகியவற்றை வழங்குபவர் இருப்பர். மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மூன்று முக்கிய ஆதார நிதிகள் உள்ளது.
1. அவர்களின் சொந்த பங்கு முதலீடு மற்றும் இருப்புகள்.
2. பொது மக்களிடம் இருந்து பெறும் வைப்பு நிதிகள்.
3. மாநில கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து பெறும் கடன்கள்.
- சங்க உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல்.
- வங்கி வணிகம் செய்தல்
- பி.ஏ.சி.எஸ் (PACS) - க்கு சமமான நிலையமாக செயல்பட்டு சில சங்கங்களின் அதிகமான நிதியை நிதி பற்றாக்குறை உள்ளவற்றிற்கு பிரித்து அனுப்புதல்.
- கடன் இல்லா செயல்களை மேற்கொள்ளுதல்.
- பி.ஏ.சி.எஸ் (PACS) உடன் நெருக்கமான மற்றும் தொடர்ச்சியான தொடர்பு வைத்துக் கொண்டு, அவற்றிற்கு தலைமை மற்றும் வழிகாட்டுதல் செய்தல்.
- பி.ஏ.சி.எஸ் (PACS) - கண்காணித்தல் மற்றும் ஆய்வு செய்தல்.
- பி.ஏ.சி.எஸ் (PACS) - வளத்தை முதலீடு செய்ய பாதுகாப்பான இடத்தை வழங்குதல்.
மாநிலத்தில் மொத்தம் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் 717 கிளைகள் அதிகபட்சமாக கிராமப் பகுதிகளில் உள்ளது. அவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வதற்காக உள்ளது.
இந்த விழாவில் நமதூர் ஜமாஅத்தார்கள், சங்கத்தார்கள், பொதுமக்கள் என திரளாக மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறிப்பு : இந்த வங்கி வருவதற்காக முயற்சிகள் எடுத்த, உடல் உழைப்பு செய்த, உதவிக்கரம் நீட்டிய, இடம் கொடுத்து உதவிய அத்துனை நல் உள்ளங்களுக்கும் puduvalasai.tk- வின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக