- Thursday, 10 January 2013 08:56
நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் ஊடுருவி துப்பாக்கி சூடு நடத்தியதில், இந்திய ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டிருந்தனர்.
இதற்கு அந்நாட்டு வெளியுறவுத் தூதரை வரவழைத்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தது.
காஷ்மீர் அருகே பூஞ்ச் மாவட்டத்தின் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரு இந்திய இராணுவ வீரர்கள் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை அழைத்து, 'இது இரு நாட்டு உறவை முடக்க நடத்திய சதி செயல் என்றும், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது ஒப்பந்த செயல்களுக்கு விரோதமானது என்றும் கண்டிப்புடன் கூறியுள்ளார். மேலும் உடனடியாக இச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறும் கோரியிருந்தார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி பேசுகையில், இந்திய - பாகிஸ்தான் இடையே இராணுவ போரை தொடக்கும் அளவு பாதிப்பு நிறைந்த செயலாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது இரு நாட்டு உறவுகளை முடக்கும் செயல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் அருண்ஜெட்லியும், பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருப்பதோடு, இந்த எதிர்பாராத ஊடுருவல் தாக்குதலை பாகிஸ்தான் கையாள்வது மிகவும் கண்டனத்துக்குரிய செயல். கட்டுப்பாடுகளை அடிக்கடி மீறும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தாக வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதேவேளை உயிரிழந்த இராணுவ வீரர்களில் ஒருவரான ஹோம்ராஜ் சிங்கின் பூதவுடல் இராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட போது இறுதி சடங்கில் கலந்து கொண்ட அவரது உறவினர்கள், ஹோம்ராஜ் தற்போது எங்அளுடன் இல்லை. ஆனால் அவர் நாட்டுக்காக தன் உயிரையே விட்டுள்ளார் என்று எண்ணும் போது பெருமையாக உள்ளது என கண்ணீருடன் கூறியுள்ளார்.
4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக