ஜோர்ஜ்டவுன்,
ஜனவரி 8- பட்டவர்த் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட போது, 9
கைதிகள் போலீசாரை தாக்கிவிட்டு துணிகரமாக தப்பிச்சென்றனர்.
அவர்களைத் தேடும் முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
புக்கிட் அமான் விமானப் பிரிவு, பொதுநடவடிக்கைப் பிரிவு என மொத்தம் 120 காவல்துறை
அதிகாரிகள் தப்பியோடிய கைதிகளை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
முன்னதாக நேற்று, நீதிமன்ற விசாரணைக்காக, போலீசார்
கைதிகளை போலீஸ் வேனில் அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென கைதிகள்
மிளகாய்ப்பொடியை போலீசார் மீது தூவியதோடு கடுமையாகத் தாக்கிவிட்டு போலீஸ் வேனில்
தப்பிச் சென்றனர். கைதிகளால் கடத்தி கொண்டு செல்லப்பட்ட வேன் இங்குள்ள ஒரு
புறநகர்பகுதியில் விட்டுச் செல்லப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார்
தப்பிச் சென்ற 2 கைதிகளைக் கையும் களவுமாக பிடித்தனர். மற்ற ஏழு பேரும்
மாயமாகிவிட்டனர். கைதுசெய்யப்பட்ட இரு கைதிகளும் பின்னர் நீதிமன்றத்திற்குக்
கொண்டு செல்லப்பட்டனர்.
/vanakkammalaysia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக