வெள்ளி, 11 ஜனவரி, 2013

ரிசானாவின் சடலம் சவூதியிலேயே அடக்கம்! (முழுமையான செய்திகள் இணைப்பு) (Video & Photo)



சவூதி அரேபியாவில் நேற்று சிரச் சேதம் செய்யப்பட்ட ரிசானா நபீக்கின் சடலம் அந்நாட்டிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
சவூதிக்கான இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு இத்தகவலை உறுதிப்படுத்தி உள்ளது.
ரிசானாவின் சடலம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென வெளிநாட்டு அமைச்சுக் கேட்டு இருந்தது.
ஆயினும் சவூதி அரேபிய நாட்டு சட்டத்தால் இது சாத்தியப்படாது என தூதரகம் விளக்கம் கொடுத்து இருந்தது.

2005 ஆம் ஆண்டில் சவூதி அரேபிய எஜமானரின் வீட்டில் இரு வாரங்கள் பணிப் பெண்ணாக வேலை பார்த்து இருந்தார் ரிசானா.
இவரிடம் நான்கு மாத குழந்தையை ஒப்படைத்து விட்டு பெற்றோர் வெளியில் சென்றிருந்தனர்.
குழந்தைக்கு ரிசானா புட்டிப் பால் கொடுத்து இருக்கின்றார். அப்போது குழந்தைக்கு புரையேறி குழந்தை இறந்து விட்டது.
இவர்தான் குழந்தையை கொன்று விட்டார் என்று எஜமானர் தவறாக முடிவெடுத்து விட்டனர்.
rizanatt
ரிசானாவின் வறுமையான குடும்பம்…
சவூதி அரேபிய நீதிமன்றம் இவரை படுகொலைக் குற்றவாளியாக கண்டு மரண தண்டனைத் தீர்ப்பு விதித்தது.
இவரை மீட்க இராஜதந்திர, மனிதாபிமான ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்துமே தோல்வியில் முடிந்து விட்டன.
சவூதி அரசினால் சிரச் சேதம் செய்யப்பட்டு பரிதாபமாக படுகொலை செய்யப்பட்ட ரிசானா குறித்த செய்திகளின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றது.
ஒவ்வொரு செய்திகளையும் கீழே உள்ள இணைப்புக்களை அழுத்துவதன் மூலம் காணலாம்…
1. ரிசானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
2. ரிசானாவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றிய சவுதி அரசுக்கு மஹிந்தர் கண்டனம்!
3. ரிசானாவின் நிலைமை ஒரு சிங்கள பெண்ணுக்கு ஏற்பட்டு இருந்தால்..?
4. ரிசானாவின் மரணத்துக்கு இலங்கை ஜனாதிபதியே பொறுப்பு!
5. இஸ்லாம் பிறந்த பூமியிலேயே இன்று மன்னிப்பு எனும் பெருங்கொடையை நாம் இழந்தோம்!
6. உம்மாநான் சவூதிக்கு போறேன்…!
7. ரிசானா மரணமடைந்ததே தெரியாமல் அவரது விடுதலை குறித்து இன்று சபையில் பேசிய அமைச்சர் டிலான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக