வியாழன், 10 ஜனவரி, 2013


உளவாளி என்று கூறி சீக்கியரின் தலையை துண்டித்த பாக். தீவிரவாத அமைப்பு!

on Thursday, 10 January 2013 08:37.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பு ஒன்று, கடந்த மாதம் கடத்திச் சென்றிருந்த சீக்கியரை இப்போது கொன்று வீசியுள்ளது. சீக்கியர் என்பதற்காக இவர் கொல்லப்படவில்லை. ஒரு தீவிரவாத இஸ்லாமிய இயக்கம், இவர், மற்றொரு இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின் உளவாளி என்று குற்றம்சாட்டி, தலையை துண்டித்துள்ளது.

நியூயார்க் பயணிகள் கப்பல் FERRY விபத்து: தூக்கி வீசப்பட்ட பயணிகள் ; 85 பேர் காயம்!

on Thursday, 10 January 2013 08:30.
நியூயார்க்கில் அதிகம் பயணிக்கும் இரண்டு அடுக்கு ஃபெரி (commuter ferry) நேற்று காலை விபத்துக்குள்ளானது. 85க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விபத்தில் காயமடைந்தனர். மொத்தம் 326 பேர் பயணம் செய்த இந்த ஃபெரி விபத்துக்குள்ளானது, அங்கு அலுவலகங்களில் பணிபுரியும் பலரை திகிலடைய வைத்துள்ளது.

குற்றவியல் பிரேரணை: ஆதரவாக வாக்களிக்கும் உறுப்பினருக்கு எதிராக வழக்கு!

on Thursday, 10 January 2013 06:24.
குற்றவியல் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெறும் வாக்கெடுப்பின் போது, அதற்கு ஆதரவாக வாக்களிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. அரசியல் அமைப்பிற்கு விரோதமான முறையில் வாக்களிக்கும் நாடாளுமன்ற... 

யாழில் இராணுவத்தின் அடாவடித்தனங்களை கண்டேன்: பிரான்ஸ் தூதுவர்!

on Thursday, 10 January 2013 06:15.
சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களை எனது கண்களாலேயே நான் நேரடியாகக் கண்டு அதிர்ச்சியடைந்தேன் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபிசன் யாழ்.மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

அப்பாவி பெண்ணின் உயிரைப் பறித்த சிறிலங்கா: ஆசிய மனித உரிமைகள் ஆணையம்!

on Thursday, 10 January 2013 05:50.
ரிசானா நபீக்கின் உயிரைக் காப்பாற்றத் தவறியதற்கான முழுமையான பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஏற்க வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த அப்பாவி சிறிலங்காப் பணிப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றும் முயற்சிகளை ஜனாதிபதியும்,

மரணத்தில் முடிந்த சிறிலங்காவின் இராஜதந்திரம்!

on Thursday, 10 January 2013 05:36.
சவூதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணாக சென்ற றிசானா நாபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. றிஸானா நபீக்கிற்கு இன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். நான்கு மாத சிசுவொன்றை கொலை செய்த...

பிரான்ஸில் பள்ளிப் பேருந்து மோதி சிறுவன் பலி!

on Wednesday, 09 January 2013 10:46.
செவ்வாய் காலை La Norville (Essonne)இல் பாடசாலைப் பேருந்து மோதி 12 வயதுச் சிறுவன் பலியாகியுள்ளான். காலை 08h30 மணியளவில் Albert-Camus பாடசாலையின் முன்னால் உள்ள Rue du Peuple-la-Lance இல் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இச் சிறுவன் அவசரமாகக் காலை 10h00 மணியளவில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக